| ADDED : ஜூன் 11, 2024 07:16 AM
தேனி : மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள 55 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு இன்று நடக்கிறது.மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளிகள் 36, மேல்நிலைப்பள்ளிகள் 70 உள்ளன. இப்பள்ளிகளில் கடந்தாண்டு பயின்ற மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஆசிரியர்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக 55 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எமிஸ் ஆன்லைன் மூலம் இன்று பணிநிரவல் கலந்தாய்வு நடக்கிறது. இதில் மாவட்டத்திற்குள் காலிபணியிடங்கள், கூடுதல் தேவையுள்ள அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர்.இதில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர், சிறுநீரக, இ தய, மூளைக்கட்டி அறுவை சிகிச்சை, டையாலிசிஸ் சிகிச்சை செய்தவர்கள், ராணுவ வீரர்களின் மனைவி உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 40 சதவீத கண்பார்வையற்ற, மாற்றுத்திறன் ஆசிரியர்கள், என்.சி.சி., பொறுப்பில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக கண்டறியப்பட்டாலும் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட உள்ளது.