உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் 2ம் நாளாக காத்திருப்பு

அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் 2ம் நாளாக காத்திருப்பு

பெரியகுளம் : பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் சம்பள உயர்வு கோரி 2ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவமனையில் தூய்மை பணி பாதிக்கப்பட்டுள்ளது.பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனம் மூலம் 70 ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்கினறனர். இவர்கள் துப்புரவு பணி, பாதுகாப்பு, சமையல் உதவியாளர், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்துசெல்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் (ஜூன் 28) முதல் சம்பளம் உயர்வு நிலுவை தொகை வழங்க வேண்டும் கொரோனா காலத்தில் பணி செய்வதற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உட்பட ஏழு அம்ச கோரிக்கை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தனியார் நிறுவன மண்டல பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை இழுபறியால் நேற்று முன்தினம் இரவு அதே இடத்தில் தங்கி, நேற்று மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.இதனால் மருத்துவமனையில் தூய்மைப்பணி பாதித்துள்ளது. நோயாளிகளை உறவினர்கள் வீல் சேரில் தள்ளிச்செல்லும் நிலை உள்ளது. மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார் கூறுகையில்: காத்திருப்பு போராட்டம் குறித்து கலெக்டர் ஷஜீவனாவிடம் தகவல் தெரிவித்துள்ளனே் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ