உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தில் பயிர் சாகுபடி பயிற்சி

விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தில் பயிர் சாகுபடி பயிற்சி

தேனி : விவசாயிகளுக்கு 'அட்மா' திட்டத்தில் பயிர் சாகுபடி தொழில் நுட்ப பயிற்சிகள் வழங்க உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது, மாவட்டத்தில் 24 கிராமங்கள் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இக்கிராங்களில் பெண் விவசாயிகள், அனைத்து பயிர் சாகுபடி செய்ய கூடிய விவசாயிகள் என 40 பேர் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.தேர்வு செய்யப்படுவர்கள் கிராம முன்னேற்ற குழுவாக பதிவு செய்யப்படுவர்.'அட்மா' திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வட்டாரம் வாரியாக பயிர் சாகுபடி தொழில்நுட்பம், மண் பரிசோதனையின் முக்கியம், விதைநேர்த்தி, பயிர் மேலாண்மை, அறுவடை நேரத்தில் செய்ய வேண்டிய பணிகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒரு நாள் பயிற்சி இம்மாதத்திற்குள் வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் கத்தரி, தக்காளி உள்ளிட்ட தோட்டகலை பயிர்கள் சாகுபடி பற்றியும் பயிற்சி வழங்கப்பட உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ