உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடுக்கி அணை அருகே பாறைகள் சரிந்து நுழைவு கேட் சுவர் சேதம்

இடுக்கி அணை அருகே பாறைகள் சரிந்து நுழைவு கேட் சுவர் சேதம்

மூணாறு : இடுக்கி அணையின் நுழைவு பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்தில் 'கேட்' டின் சுவர் சேதம் அடைந்தது.இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இடுக்கி அணை ஆர்ச் வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளபோதும் தண்ணீர் ஒன்றாக தேங்கும்.இந்நிலையில் குறத்தி மலையில் இருந்து மெகா சைஸ் பாறை திடீரென சரிந்து 'ஆர்ச்' அணையின் கிழக்கு பகுதியில் உள்ள நுழைவு கேட் முன்பு விழுந்து சிதறியது. அதில் கேட் சுவர் சிறிது சேதமடைந்தது. அப்பகுதி அணைக்குச் செல்லும் நுழைவு பகுதியாக இருந்தது. அங்கு டிக்கெட் பெற்று சுற்றுலா பயணிகள் அணையை பார்க்க சென்று வந்தனர். தற்போது அப்பகுதி வழியாக செல்ல அனுமதி இல்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பாறை சரிந்து விழுந்த பகுதியில் அணை பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதற்கு முன்பும் குறத்தி மலையில் இருந்து பாறை உருண்டு அணையின் அடி பகுதியில் உள்ள பாதுகாப்பு துறை ஊழியர்கள் குடியிருப்பு அருகே விழுந்தது. அணையின் அருகில் உள்ள வைசாலிமலையில் இருந்து 2013 ஜூலை 15ல் பாறைகள் உருண்டு செருதோணி ஆற்றில் விழுந்தன. அதுபோன்று ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குறவன், குறத்தி மலைகளில் இருந்து பலமுறை பாறைகள் சரிந்து விழுந்தன.இடுக்கி, செருதோணி அணைகளின் அருகே ஆபத்தான நிலையில் மெகா சைஸ் பாறைகள் ஏராளம் உள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்