உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சேதமடைந்த சுகாதார வளாகம்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேதமடைந்த சுகாதார வளாகம்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் ஜெயமங்கலம் காந்திநகர் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி சேதமடைந்ததால் விசேஷ காலங்களில் மக்கள் சிரமப்படுகின்றனர்.இங்கு முகூர்த்த மாதங்களில் அதிகளவில் திருமணம், காதணி விழா, வளைகாப்பு உட்பட பல்வேறு விசேஷ வைபவங்கள் நடக்கின்றன. சுகாதார வளாகத்தில் கழிப்பறை கோப்பைகள் உடைந்தும், தண்ணீர் வசதி இல்லாமல் பராமரிப்பு இன்றி உள்ளன. இதனால் விசேஷங்களை நடத்துபவர்கள் சங்கடப்படுவதுடன், சிரமப்படுகின்றனர். இதுகுறித்து இந்தப்பகுதி மக்கள் பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தற்போது ஆடியில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் இல்லை. ஆவணியில் விசேஷங்கள் உள்ளதால் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ