உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தாமரைக்குளம் வர மறுக்கும் விடியல் பயண டவுன் பஸ்கள்

தாமரைக்குளம் வர மறுக்கும் விடியல் பயண டவுன் பஸ்கள்

தேனி: தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்துவிடம் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: தேனியின் மையப்பகுதியில் காமராஜர் நினைவு பஸ் ஸ்டாண்டு அமைந்துள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜர் பஸ் ஸ்டாண்டை பழைய பஸ் ஸ்டாண்ட் என அழைத்தனர். எங்கள் இயக்கத்தின் சார்பில் 2014 மனு அளித்தோம். அதன்பின் அனைத்து டவுன் பஸ்களிலும் காமராஜர் பஸ் ஸ்டாண்ட் என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. தற்போது ஸ்டிக்கர்கள் சேதமாகி மீண்டும் பழைய பஸ் ஸ்டாண்ட் என எழுதப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து காமராஜர் பஸ் ஸ்டாண்ட் என குறிப்பிட வேண்டும். பெரியகுளத்தில் இருந்து தாமரைக்குளம், வடுகபட்டி, வைகை அணை வழியாக ஆண்டிபட்டி செல்லும் பஸ்கள் பகலில் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை தாமரைக்குளம் வந்து சென்றன. தற்போது பஸ்கள் வருவது இல்லை. இதனால் மக்கள் அதிக செலவு செய்து ஆட்டோவில் பயனம் செய்கின்றனர். அரசின் விடியல் பயணம் திட்டம் இப்பகுதி பெண்களுக்கு கிடைக்கவில்லை. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என கோரியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை