உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் 120 எக்டேர் தரிசு நிலத்தை மேம்படுத்த முடிவு: இந்த ஆண்டு முதல் வேளாண்துறை புதிய முயற்சி

மாவட்டத்தில் 120 எக்டேர் தரிசு நிலத்தை மேம்படுத்த முடிவு: இந்த ஆண்டு முதல் வேளாண்துறை புதிய முயற்சி

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வேளாண் வளர்ச்சி திட்டத்தில் குறிப்பிட்ட ஊராட்சிகள் தேர்வு செய்யப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் வேளாண், தோட்டக்கலை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட 13 துறைகள் இணைந்து கிராமத்தில் வேளாண் தொடர்புடைய தொழில்கள் வளர்ச்சிக்கு திட்டமிட்டு மேம்படுத்துகின்றன. இத்திட்டத்தில் மாவட்டத்தில் 24 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள 120 எக்டேர் தரிசு நிலங்களை ரூ. 11.52 லட்சம் செலவில் மேம்படுத்தி விவசாய நிலமாக மாற்ற உள்ளனர். இந்தாண்டு புது முயற்சியாக தனி ஒரு விவசாயி நிலங்களை மேம்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.வேளாண் அதிகாரிகள் கூறுகையில், இத்திட்டத்தில் இதுவரை தரிசு நிலங்கள் தேர்வு செய்யும் போது குறிப்பிட்ட பகுதியில் 10 முதல் 15 விவசாயிகளுடைய 15 எக்டர் வரையிலான தரிசு நிலங்களை மொத்தமாக தேர்வு செய்வோம். அதில் புதர்களை அகற்றி நுண்ணீர் பாசனம் மூலம் மர, பழ கன்றுகள் நடவு செய்து அதனை விவசாய நிலமாக மாற்றுவோம். இந்தாண்டு தனிப்பட்ட விவசாயிகளின் தரிசு நிலங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் முட்புதர்களை அகற்ற, நிலத்தை சமப்படுத்துதல், உழுவு செய்தல் என ஒரு எக்டேருக்கு ரூ. 19,200 வீதம் கணக்கிட பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் ரூ. 9600 வழங்கப்பட உள்ளது. ஒரு விவசாயி அதிகபட்சமாக 2 எக்டேர் வரையிலான தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை