உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் தினகரன் போட்டி கண்காணிப்பில் கூடுதல் கவனம்

தேனியில் தினகரன் போட்டி கண்காணிப்பில் கூடுதல் கவனம்

ஆண்டிபட்டி : தேனி தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் அ.மமு.க.பொதுச் செயலாளர் தினகரன் போட்டியிடுவதால் கண்காணிப்பில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.தேர்தலில் தினகரன் வேட்பாளர் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவதுவெளியூரிலிருந்து தேர்தல் பணிக்கு அதிகம் பேர் வந்து செல்லவார்கள் என்பது தான்.நேற்றுபெரியகுளம் ஜி.கல்லுப்பட்டி பட்டாளம்மன் கோயிலில் சுவாமி தரிசனத்துடன் தேர்தல் பணிகளை துவக்கினார். இன்றுஆண்டிபட்டியில்பா.ஜ., கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்திலும் ஓ. பன்னீர்செல்வத்துடன் பங்கேற்க உள்ளார். மார்ச் 27ல் வேட்பு மனு தாக்கல்செய்யதிட்டமிட்டுள்ளனர்.தேனி தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் தினகரன் களம் இறங்கி உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. வெளியூரிலிருந்து வரும் நபர்கள் தங்குவதற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணி ஒருபுறம் நடந்து வருகிறது.இதுபோன்ற நடவடிக்கைகளால் இப்பகுதிக்கு வரும் கார்கள், வாகனங்கள், வெளியூர் நபர்களை கண்காணிப்பதில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ