| ADDED : ஏப் 17, 2024 05:19 AM
போடி : தேனி லோக்சபா தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் உப்புக்கோட்டை, குண்டல்நாயக்கன்பட்டி, பாலார்பட்டி, கூழையனுர் பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார்.கூழையனூரில் பிரசாரம் செய்த போது தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் தினகரன் பிரச்சார வாகனத்தில் சோதனை நடத்தினர். இச் சோதனையில் எதுவும் இல்லை.இது குறித்து தினகரன் பேசுகையில், 'தேவையற்ற வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர். வாகனத்தில் எதுவும் இல்லை. ஆனால் ஆளும், ஆண்ட கட்சியினர் பணம் கொடுத்து வருகின்றனர். இவர்களை அதிகாரிகள் பிடிக்க வேண்டும். அப்படி இல்லாத போது நாங்கள் பிடித்துக் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.