உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஏத்தக்கோயில் ரோட்டில் ஆட்டோக்களால் இடையூறு

ஏத்தக்கோயில் ரோட்டில் ஆட்டோக்களால் இடையூறு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி - ஏத்தக்கோயில் ரோட்டின் இருபுறமும் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றனர்.ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து ரயில்வே கேட் வழியாக மணியக்காரன்பட்டி, மணியாரம்பட்டி, மறவபட்டி, போடிதாசன்பட்டி, அனுப்பபட்டி, ரங்கராம்பட்டி, சித்தையகவுண்டன்பட்டி, ஏத்தக்கோயில் ஆகிய கிராமங்களுக்கு டவுன் பஸ் சென்று திரும்புகிறது. இப்பகுதியில் டவுன் பஸ்களுக்கு போட்டியாக அதிக அளவில் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோக்களை காமராஜர் நகர் வரை ரோட்டில் இருபுறமும் வரிசையாக நிறுத்தி விடுகின்றனர். இந்த ரோட்டை கடந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தனியார் ஆசிரியர் பயிற்சி மையம், வேளாண்துறை, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகங்கள், தற்காலிக கட்டடத்தில் செயல்படும் ஆண்டிபட்டி கோர்ட் ஆகியவை இருப்பதால் எந்நேரமும் இப்பகுதியில் போக்குவரத்தும் பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் இருக்கும். இந்நிலையில் ரோட்டில் இருபுறமும் ஆட்டோக்கள் நிற்பதால் எதிரில் வரும் வாகனங்கள் விலகிச் செல்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது பள்ளி, கல்லூரிகள் துவங்கும், முடியும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாகிறது. ரோட்டில் இருபுறமும் ஆட்டோக்கள் நிறுத்துவதை போலீசார் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் செல்கின்றனர். ரோட்டில் ஆட்டோக்களை ஒருபுறமாக நிறுத்தவோ அல்லது ஆட்டோக்களுக்கு தனியிடம் ஒதுக்கித்தர ஆண்டிபட்டி போலீசார், பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை