உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய விளையாட்டு தினத்தில் மாவட்ட ஹாக்கி போட்டி

தேசிய விளையாட்டு தினத்தில் மாவட்ட ஹாக்கி போட்டி

தேனி : மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடந்தது.இந்தியா ஹாக்கி அணி முன்னாள் வீரர் மேஜர் தயான்சந்த் பிறந்தநாளான ஆக.,29 தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடந்தது. போட்டிகளை தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, துணைத்தலைவர் செல்வம், உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் துவக்கி வைத்தனர். மாணவர்கள் பிரிவில் 6 அணிகள், மாணவிகள் பிரிவில் 3 அணிகள் பங்கேற்றன.மாணவிகள் பிரிவில் வடுகபட்டிஅரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், செயின்ட் ஆக்னஸ் மேல்நிலைப்பள்ளி 2ம் இடமும், வெங்கடாசலபுரம் பள்ளி அணி 3ம் இடமும் வென்றது. மாணவர்கள் பிரிவில் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், எஸ்.யூ.எம்., மேல்நிலைப்பள்ளி 2ம் இடமும், வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 3ம் இடமும் வென்றன.வெற்றி பெற்ற அணிகளுக்கு ஏ.டி.எஸ்.பி., சுகுமார், கலால் உதவி ஆணையர் ரவிசந்திரன், அரசு மருத்துவமனை டாக்டர்கள் முத்துக்குமார், இளங்கோ பரிசு வழங்கினர்.போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ