உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஆண்டிபட்டியில் டிவைடர்கள்

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஆண்டிபட்டியில் டிவைடர்கள்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் நெரிசல் மிகுந்த இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தற்காலிக 'டிவைடர்கள்' அமைக்கப்பட்டுள்ளது.கொச்சி -- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டியில் பைபாஸ் ரோடு வசதி இல்லை. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆண்டிபட்டியை கடந்து செல்வதால் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆண்டிபட்டி -- தெப்பம்பட்டி ரோடு சந்திப்பு வரையில் வாகனங்களால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரி மற்றும் பஸ் ஸ்டாண்ட் எதிரில் ரோட்டில் அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விடுவதால் போக்குவரத்து பாதிப்பு அதிகமாகிறது. ரோடு விரிவாக்கம் செய்த இடங்களில் கடைகள் அமைத்தும் வாகனங்களை நிறுத்தியும் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இதனை போலீசார், பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெரிசல் அனைவருக்கும் தீராத தலைவலியாக உள்ளது. தற்போது தேர்தல் நேரம் என்பதால் அடிக்கடி பிரசாரத்திற்காக ரோட்டில் முக்கிய இடங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் வாகனங்கள் ஆண்டிபட்டியை கடந்து செல்ல நீண்ட நேரம் ஆகிறது. நெரிசலான இடங்களில் வாகனங்களை நடு ரோட்டில் திருப்பி மற்றவர்களுக்கு இடையூறு செய்வதால் விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்து நெருக்கடிக்கு தற்காலிக தீர்வாக ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரையும் முக்கிய இடங்களில் ரோட்டில் தற்காலிக 'டிவைடர்' அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டியில் ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோட்டின் நடுவில் நிரந்தரமாக 'டிவைடர்' அமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை