உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி தொகுதியில் 15 ஆண்டுகளுக்கு பின் களம் காணும் தி.மு.க., வேட்பாளர்

தேனி தொகுதியில் 15 ஆண்டுகளுக்கு பின் களம் காணும் தி.மு.க., வேட்பாளர்

கம்பம் : தேனி லோக்சபா தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்செல்வன், அ.தி.மு.க. சார்பில் நாராயணசாமி, அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகின்றனர். இத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுவதால் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டிய நிலை உள்ளது. இத் தொகுதியில் 6வது முறையாக தி.மு.க. வும் அ.தி.மு.க.வும் நேரடியாக மோதுகிறது.கடந்த 2009 ல் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங். வேட்பாளர் ஆரூணை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தங்க தமிழ் செல்வன் தோல்வியடைந்தார். 15 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார். மும்முனை போட்டி என்பதால் வெற்றி யாருக்கு என்பதை வேட்பாளர்களின் தேர்தல் பணி தான் முடிவு செய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை