உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கனவு இல்ல திட்ட சிறப்பு கிராம சபை கூட்டம்

கனவு இல்ல திட்ட சிறப்பு கிராம சபை கூட்டம்

தேனி: மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கனவு இல்ல திட்ட பயனாளிகள் தேர்வு தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.ஊஞ்சாம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது.கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார். துணை பி.டி.ஓ., உமா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் வேல்முருகன், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கனவு இல்ல திட்டத்திற்கு 22 பேரும், சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தரும் திட்டத்தில் 5 பேர் என 27 பேர் விண்ணப்பித்தனர். இத்திட்டங்களில் பயன்பெற பட்டா அவசியம் என்றும், அதற்கு ஜமாபந்தியில் விண்ணப்பித்து பெறலாம் என அறிவுறுத்தப்பட்டது.தேனி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரண்மனைப்புதுார் ஊராட்சியில் தலைவர் பிச்சை தலைமை வகித்தார். ஒன்றிய அலுவலக உதவியாளர் கலாவதி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் காசிராஜன், செயலாளர் பாண்டி, வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டித்தர கோரி 12 பேர் மனு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்