உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விபத்து ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டிய டிரைவரின் லைசென்ஸ் ரத்து

விபத்து ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டிய டிரைவரின் லைசென்ஸ் ரத்து

மூணாறு: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டிய டிரைவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.மூணாறு அருகே பைசன்வாலி பகுதியைச் சேர்ந்தவர் ரிதுகிருஷ்ணன். இவர், ஜூன் 2ல் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் லாக்காடு எஸ்டேட் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டினார். காரில் இருந்த அவரது நண்பர்கள் உடலை வெளியில் காட்டி ஆட்டம் போட்டனர். அதனால் அந்த வழியில் வாகனங்களை ஓட்டிச் சென்ற டிரைவர்கள், பயணிகள் அச்சம் அடைந்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.அச்சம்பவத்தில் இடுக்கி மோட்டார் வாகனதுறை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரிதுகிருஷ்ணனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தனர். அவரது காரின் பதிவை ரத்து செய்யுமாறு உடும்பன்சோலை மோட்டார் வாகனதுறையினருக்கு பரிந்துரைத்தனர். தவிர மோட்டார் வாகனதுறையினரின் விழிப்புணர்வு பயிற்சி முகாமில் ரிதுகிருஷ்ணன் மூன்று நாட்கள் பங்கேற்குமாறும், காரில் ஆட்டம் போட்ட அவரது நண்பர்கள் சமூக சேவை பணிகளில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ