உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க வேளாண் பொறியியல் துறையில் ட்ரோன்

பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க வேளாண் பொறியியல் துறையில் ட்ரோன்

தேனி : பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க வேளாண் பொறியியல் துறைக்கு கலெக்டர் நிதியில் இருந்து புதிதாக 'ட்ரோன்' வாங்கப்பட்டுள்ளது.தேனி வேளாண் சார்ந்த மாவட்டமாகும். கம்பம் பள்ளதாக்கு பகுதிகளில் அதிக பரப்பில் நெல் சாகுபடியும், மற்ற பகுதிகளில் காய்கறிகள், வாழை, பழங்கள், தென்னை, பூக்கள், சிறுதானியங்கள் என பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டில் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் போது விவசாயிகள் சிலர் பாதித்து உயிரிழந்தனர். குறிப்பாக 4அடிக்கு உயரமாக வளர்ந்துள்ள பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் போது பாதிப்புகள் அதிகரித்தது.'ட்ரோன்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருந்து தெளிப்பதன் மூலம் விவசாயிகள் பாதிப்படைவதை தவிர்ககலாம். மேலும் செலவு குறைவு என வேளாண் துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் கலெக்டர் நிதியில் இருந்து 10 லி., கொள்ளளவு கொண்ட 'ட்ரோன்' விவசாயிகள் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டுள்ளது. இது வேளாண் பொறியியல் துறை மூலம் பயன்பாட்டிற்கு வரும். தனியார் 'ட்ரோன்' மருந்து தெளிப்பவர்கள் ஒரு டேங்கிற்கு ரூ. 500 முதல் 600 வரை வசூலிக்கின்றனர். மேலும் இதற்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டும் ட்ரோன் இயக்க முடியும். ட்ரோனை இயக்கும் நபர்கள், கட்டணம் நிர்ணயிக்கும் பணியில் வேளாண் பொறியியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த 'ட்ரோன் 'மூலம் விவசாயிகளுக்கு மாதிரி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை