உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குப்பை கிடங்கில் தீ வைப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு

குப்பை கிடங்கில் தீ வைப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சிக்கான குப்பை கிடங்கில் தீ வைப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.இப்பேரூராட்சியில் அன்றாடம் சேகரிக்கப்படும் பல டன் குப்பை ஆண்டிபட்டி சுடுகாடு பகுதியை அடுத்துள்ள திறந்தவெளி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. குப்பையில் கிடக்கும் பொருட்களை சேகரிக்க வரும் சிலர் குப்பையில் தீ வைத்து செல்கின்றனர். தனி நபர்கள் சிலரும் வாகனங்களில் குப்பையை கொண்டு வந்து அப்பகுதியில் கொட்டி தீ வைக்கின்றனர். குப்பையில் தீ எரிவதால் ஏற்படும் நச்சுப் புகை குப்பை கிடங்கை அடுத்துள்ள குடியிருப்பு பகுதிகளில் பரவி பாதிப்பு ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக நடக்கும் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை இல்லை. தேனி மாசுகட்டுப் பாட்டுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. மேலும் குப்பையில் தீ வைத்து செல்லும் நபர்களை கண்காணித்து அபராதம் விதிக்க ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ