உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் மோதி முன்னாள் ராணுவ வீரர் காயம்

டூவீலர் மோதி முன்னாள் ராணுவ வீரர் காயம்

தேனி : பூதிப்புரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் நாகராஜன் 49, தற்போது போடியில் வங்கி காவலராக பணிபுரிகிறார். தேனி ரத்தினம் நகரில் வீடு கட்டி வருகிறார். இதனை பார்வையிட தனது அண்ணன் மகன் தங்கவிக்னேஷ் உடன் டூவீலரில் சென்றார். திண்டுக்கல் குமுளி பைப்பாஸ் ரோட்டில் வீரப்ப அய்யனார் மலைக்கோயில் சந்திப்பில் பெரியகுளம் எ.புதுப்பட்டி சரத்குமார் ஓட்டி வந்த டூவீலர் நாகராஜன் டூவீலரில் மோதியது. இருவரும் காயமடைந்து அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை