உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு

ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு

தேனி: மாவட்டத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,க்கள், தனியார் ஐ.டி.ஐ.,க்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஐ.டி.ஐ.,க்களில் 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக சேரலாம். பயிற்சியில் சேருபவர்களுக்கு மாநில அரசு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா மிதிவண்டி, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம், பாடப்புத்தகம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. தேனி, ஆண்டிப்பட்டி, உப்பார்பட்டி தப்புக்குண்டு ரோட்டில் உள்ள போடி ஐ.டி.ஐ.,களில் நேரில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். பதிவு கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு தேனி ஐ.டி.ஐ., தொலைபேசி எண் 04545 291240 ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை