உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோம்பை, பண்ணைப்புரம் பகுதியில் மீண்டும் ஒற்றை யானை நடமாட்டம் அச்சத்தில் விவசாயிகள்

கோம்பை, பண்ணைப்புரம் பகுதியில் மீண்டும் ஒற்றை யானை நடமாட்டம் அச்சத்தில் விவசாயிகள்

உத்தமபாளையம் : கோம்பை, பண்ணைப்புரம் மலையடிவாரங்களில் ஒற்றை யாறை சுற்றி வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.தேனி மாவட்டத்தில் குமுளியில் ஆரம்பித்து கம்பமெட்டு, கோம்பை, பண்ணைப்புரம் தேவாரம் வரை மேற்கு திசையில் மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.- சுருளி அருவிக்கும் அடிக்கடி வந்து செல்கிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் க. புதுப்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் ஆகிய ஊர்களை சேர்ந்த மலையடிவாரங்களில் தோட்டம் வைத்திருக்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளனர்.கடந்தாண்டு பண்ணைப்புரம் மேற்கு மலையடிவார தோட்டத்தில் படுத்திருந்த பல்லவராயன்பட்டியை சேர்ந்த காவலாளியை யானை மிதித்து கொன்றது.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பண்ணைப்புரம் மேற்கு மலையடிவாரத்தில் ஜக்கப்பன்குளத்திற்கு அருகில் கேரளாவை சேர்ந்தவரின் தோட்டத்தில் காவலாளியாக இருந்த கோம்பையை சேர்ந்த ராமுவை65,யானை தாக்கியதில் கைமுறிவு ஏற்பட்டது. காயங்களுடன் உயிர் தப்பினார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அட்டகாசம் செய்த ஒற்றை யானை போன்று, தற்போது ஒற்றை யானை மலையடிவாரங்களில் சுற்றி வருகிறது. நேற்று முன்தினம் பண்ணைப்புரம் மலையடிவாரங்களில் ஒற்றை யானை சுற்றி திரிந்துள்ளது. எனவே விவசாயிகள் இரவு காவலுக்கு செல்வதையே தவிர்க்கின்றனர். பகலில் பயந்து கொண்டே சென்று வருகின்றனர். யானைகள் வழித்தடம் இருப்பதால், யானைகள் நடமாட்டம் இருப்பதாகவும், நாம் தான் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் வனத்துறையினர் கூறுகின்றனர்.இந்த சம்பவங்கள்விவசாயிகள்மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை