உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தக்காளி, கத்தரிக்கு உரிய விலை இன்றி விவசாயிகள் தவிப்பு

தக்காளி, கத்தரிக்கு உரிய விலை இன்றி விவசாயிகள் தவிப்பு

தேனி : மாவட்டத்தில் தக்காளி, கத்தரிக்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் தவிக்கின்றனர்.மாவட்டத்தில் 14ஆயிரம் எக்டேரில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இதில் 7ஆயிரம் எக்டேருக்கு மேல் தக்காளி அறுவடை நடந்து வருகிறது. குறிப்பாக சின்னமனுார், தேவாரம், கொடுவிலார்பட்டி, போடி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, கத்தரி, பீர்க்கு, உள்ளிட்ட காய்கறிகள் அதிகம் அறுவடை செய்யப்படுகிறது. தற்போது உழவர் சந்தைகளில் தக்காளி ரூ. 15 முதல் 20 வரை, கத்தரி ரூ.12 முதல் 15 வரை, பீர்க்கங்காய் ரூ.20 முதல் 30 வரை, அவரை ரூ.60 என விற்பனை ஆகிறது.காய்கறிகள் விலை குறைந்தது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.அதே வேளையில் விவசாயிகளிடம் தக்காளி 15 கிலோ கொண்ட பெட்டி ரூ.100க்கும், கத்தரி கிலோ ரூ.5, பீர்க்கங்காய் ரூ.8 என மார்க்கெட்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் விவசாய நிலங்களில் இருந்து வண்டிக்கு ரூ.50 வரை வாடகை கொடுத்து மார்க்கெட் கொண்டு செல்கின்றனர். இதனால் பலர் காய்கறிகளை பறிப்பதை தவிர்த்து வருகின்றனர்.குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் முதலீடு செய்த பணம் கூட கிடைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை