உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலரிலிருந்து விழுந்த பெண் பலி

டூவீலரிலிருந்து விழுந்த பெண் பலி

தேவதானப்பட்டி : பெரியகுளத்தில் இருந்து வத்தலக்குண்டுக்கு கணவருடன் டூவீலரில் செல்லும்போது தவறி விழுந்த பெண் பலியானார்.திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காந்திநகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் 25. இவரது மனைவி மணிமேகலை 21. இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.பாலமுருகன் தாயார் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இவரை பாலமுருகன், மணிமேகலையுடன் பார்த்துவிட்டு, வத்தலகுண்டுக்கு சென்றார்.ஜி. மீனாட்சிபுரம் பிரிவு அருகே டூவீலரில் இருந்து மணிமேகலை நிலை தடுமாறி விழுந்தார். மணிமேகலை கீழே விழுந்தது தெரியாமல் சிறிது தூரம் டூவீலரில் சென்றார் பாலமுருகன்.காயத்துடன் கீழே கிடந்த மணிமேகலையை மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றார். மருத்துவமனையில் மணிமேகலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை