| ADDED : ஆக 12, 2024 11:32 PM
தேனி : தேனி சுக்குவாடன்பட்டி தாய் தமிழ்நாடு அக்ரோ பார்பஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக கூறி ரூ.99.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் நிறுவனத்தின் இயக்குனர் தனபாலை 33, போலீசார் நேற்று கைது செய்தனர்.இந்நிதிநிறுவனத்தின் இயக்குனர்களாக திருப்பூரைச் சேர்ந்த சரண்யாதேவி, சரவணன், பாலகுமார், தனபால் உள்ளனர். தேனி மணிகண்டன் மேலாளராகவும், அவரது மனைவி கார்த்திகா கணக்காளராகவும், பெரியகுளம் விஜயன், ராமகிருஷ்ணன் களப்பணியாளராகவும் பணிபுரிந்தனர்.வடபுதுப்பட்டி முனியாண்டி சுவாமி கோயில் தெரு பிரேமாவிடம் 37, மணிகண்டன் மற்றும் பணியாளர்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறினர். அதை நம்பி பிரேமதா பல்வேறு தவணைகளாக ரூ.73.50 லட்சம் முதலீடு செய்தார். முதிர்வு காலம் முடிந்து பணத்தை திரும்ப கேட்ட பிரேமாவை மணிகண்டன் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தார். பிரேமா மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.நிறுவனம் மேலும் 7 பேரிடம் வேலை தருவதாக கூறி டெபாசிட்டாக ரூ.26 லட்சத்தை வாங்கியுள்ளது. முதலீட்டாளர்களிடம் ரூ.99.50 லட்சத்தை நிறுவனம் மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இயக்குனர்கள் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மணிகண்டன் ஜூன் 23ல் கைது செய்யப்பட்டார். நேற்று நிறுவன இயக்குனர் தனபாலை இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ.,க்கள் பாஸ்கரன், லதா கைது செய்தனர்.