உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலெக்டர் அலுவலக வளாகத்தில் குப்பை

கலெக்டர் அலுவலக வளாகத்தில் குப்பை

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தின் வளாகத்தில் பல இடங்கள் குப்பை கொட்டும் இடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் அலுவல் பணிகளுக்காக அலுவலர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அலுவலக முன் பகுதியில் ரோட்டின் ஓரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பிற்கு அருகே பள்ளமாக உள்ளது. இந்த பகுதியில் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் அலுவலகங்களின் குப்பைகள், வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கடைகளின் குப்பைகள், மரங்களில் இருந்து விழும் குப்பைகள் கொட்டப்படுகின்ற்ன. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இவற்றை முறையாக அப்புறப்படுத்தி, குப்பைகளை உரங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை