உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அவர் வர வேண்டாம் என்கிறார்: இவர் கவனிப்பது இல்லை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் புலம்பல்

அவர் வர வேண்டாம் என்கிறார்: இவர் கவனிப்பது இல்லை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் புலம்பல்

கம்பம் : தேனி லோக்சபா தொகுதியில் தி.மு.க.,வில் தங்க தமிழ் செல்வன், அ.ம.மு.க.,வில் தினகரன், அ.தி.மு.க.,வில் நாராயணசாமி ஆகியோரிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பா.ஜ. கூட்டணியில் அ.ம.மு.க. தினகரன் போட்டியிடுகிறார் என்றதும் பா.ஜ., அ.ம.மு.க., ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் சந்தோசத்தில் குதித்தனர். காரணம் தினகரன் கை தாராளமாக நீளும், தேர்தலை சந்தோசமாக எதிர் கொள்ளலாம் என்று நினைத்தனர்.ஆனால் நிலைமை இவர்கள் நினைத்தது போல் இல்லை. இதுவரை தி.மு.க., அ.தி.மு.க. கவனிப்பு அளவிற்கு கூட இல்லை. அதை விட ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை யாரும் கண்டு கொள்ளவில்லை.ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறுகையில், தினகரன் வந்து விட்டார் உயிரை கொடுத்து வேலை பார்த்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் எங்களை கண்டு கொள்ளவில்லை.சரி தலைவர் போட்டியிடும் ராமநாதபுரத்திற்கு செல்லலாம் என்றால், அவர் அங்கே வர வேண்டாம் என்கிறார். என்ன செய்வது எனத் தெரியாமல் உள்ளோம் என புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ