உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வெயில் அதிகரிப்பால் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பு சுகாதரத் துறை எச்சரிக்கை

வெயில் அதிகரிப்பால் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பு சுகாதரத் துறை எச்சரிக்கை

கம்பம்: கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பகலில் உச்சபட்ச வெப்பம் நிலவுகிறது. மாலையிலும் அனல் காற்று வீசுகிறது. அதிக வெப்பம் காரணமாக நம் உடம்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக சின்ன அம்மை, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராம செவிலியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடிநீர் வழியாக இந்த தொற்று நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் தாக்குதல் நடத்தும். எனவே குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவு குளோரினேசன் செய்ய ஊராட்சிகளை வலியுறுத்த வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்த வேண்டும். கிராம செவிலியர்கள், கிராமங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது. கம்பம், உத்தமபாளையம், ஒடைப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குட்பட்ட கிராமங்களில் சுகாதாரத் துறையினர் விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை