| ADDED : ஜூலை 22, 2024 07:27 AM
தேனி: மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், தேனி, ஆண்டிபட்டி, கடமலைக்குண்டில் 'ஹிந்து கோயில்களில் இருந்து ஹிந்து அறநிலையத்துறை வெளியேறவும், கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 149 பேர் கைது செய்யப்பட்டனர்.தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். தமிழக அரசு, கோயில்களை விட்டு வெளியேற வேண்டும் என கோஷமிட்டனர். துணைத் தலைவர் திலகர், மாவட்டச் செயலாளர் விஷ்ணுபிரியன், மாவட்டத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 35 பேரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில்குமார், நகர பொதுச் செயலாளர் பகவதி ராஜ்குமார், ஒன்றியச் செயலாளர்கள் குமார், லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடமலைக்குண்டு விநாயகர் கோயில் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் உமையராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் நாகராஜன் முன்னிலை வகித்தார். போலீசாரின் தடையை மீறி ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, தேனி, கூடலுார், போடியில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட 149 பேர் கைது செய்யப்பட்டனர்.