| ADDED : ஏப் 02, 2024 12:04 AM
கம்பம் : ''சசிகலாவை முதல்வர் ஆக விடாமல் தடுத்தது பா.ஜ., இரட்டை சிலை சின்னத்தை பழனிசாமிக்கு கொடுத்தது பா,.ஜ.,வுடன் கூட்டணி வைத்தது சரிதானா என தினகரன் தான் கூற வேண்டும்'' என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதனை ஆதரித்து கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.அவர் கம்பத்தில் பேசியதாவது: தினகரனை சிறையில் தள்ளியது யார். சசிகலாவை முதல்வர் ஆக விடாமல் வழக்கை உடனே விசாரித்து 4 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பியது யார். இரட்டை இலை சின்னத்தை பழனிசாமிக்கு கொடுத்தது யார். இதையெல்லாம் செய்த பா.ஜ.வுடன் கூட்டணி வைத்தது சரியா என தினகரன் பதில் கூற வேண்டும்.தினகரனை கைது செய்த போது கண்டித்து குரல் கொடுத்தது நான் மட்டுமே. இப்போது எங்களுக்கு சின்னம் தரவில்லை. முதலில் வந்த வந்தவருக்கு முன்னுரிமையில் வழங்கியதாக தினகரன் கூறுகிறார். உங்களுக்கும், வாசனுக்கு எப்படி சின்னம் கிடைத்தது. பா.ஜ. வுடன் கூட்டணி வைத்தால் உடனே கேட்ட சின்னம். தேர்தல் கமிஷன் பா.ஜ.,வின் அலுவலகமாக மாறி விட்டது என தெரிகிறது.கச்சத் தீவு பிரச்னையை இப்போது பேசும் பா.ஜ., 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள். அவர்களது கூற்றை ஏற்றுக் கொள்வோம். ஏப். 19 ல் நட்க்கும் தேர்தலுக்கு முன் 2 நாட்களுக்கு முன் கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள். நாங்கள் எல்லோரும் வாபஸ் பெற்று பா.ஜ. விற்கு ஒட்டு போடுகிறோம் என்றார்.அல்லிநகரத்தில் பேசியதாவது:எங்கள் வேட்பாளர்களில் பலர் பேராசிரியர்கள், ஆற்றலாளர்கள். எங்களது வேட்பாளர்களுக்கு எந்த குற்றப்பிண்ணனியும் கிடையாது. சாராய விற்பனை, கொலை, ஊழல் வழக்குகள் கிடையாது. அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,விற்கு தாவியவர்களில் தங்கதமிழ்செல்வனும் ஒருவர். அ.தி.மு.க.வில் சரிபடாது என தினகரனுடன் இணைந்தார். 'குக்கர்' மக்கர் செய்ததால், தி.மு.க.,விற்கு சென்றார் என பேசினார்.