உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சாக்கடை கட்டுமானப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அவதி ஜெயமங்கலம் ஊராட்சி அவல நிலை

சாக்கடை கட்டுமானப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அவதி ஜெயமங்கலம் ஊராட்சி அவல நிலை

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், ஜெயமங்கலம் ஊராட்சியில் சாக்கடை கட்டுமானப்பணிக்காக பள்ளம் தோண்டி 70 நாட்கள் ஆகியும் அடுத்த கட்ட பணி நடைபெறததால் மக்கள் வீதிகளில் செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஜெயமங்கலம் ஊராட்சி முதல் வார்டு அக்ரஹாரம் தெரு, அக்ரஹாரம் பின்புறம் தெருவில் நூற்றுக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இந்தப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் இரு தெருக்களிலும் சாக்கடை கட்டுமானப்பணிக்கு பிப்.27ல் ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது 15 நாட்களில் இப்பணி முடியும் என ஊராட்சி நிர்வாகம் மக்களிடம் தெரிவித்தது. தற்போது 70 நாட்ககளாகியும் பணி மேற்கொள்ளவில்லை. தோண்டப்பட்ட பள்ளத்தில் சிறுவர்கள், வயதில் மூத்தவர்கள் விழுந்து காயப்படுகின்றனர். போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமலே ஒப்பந்ததாரர் வேலையை மட்டும் துவக்கி பள்ளம் தோண்டிவிட்டு சென்று விட்டார். பொதுமக்கள் வேலை எப்போது துவங்கி முடியும் என ஊராட்சியில் கேட்டால் ஏதவாது காரணம் கூறி சமாளிக்கின்றனர். ஆனால் வேலை துவங்கியபாடில்லை.வார்டின் அவல நிலை குறித்து மக்கள் கூறியதாவது:

தெருக்கள் ஆக்கிரமிப்பு

கார்த்திக், ஜெயமலங்கலம்: ஆக்கிரமிப்பால் தெருவின் அகலம் சுருங்கி உள்ளது. இந்நிலையில் சாக்கடை கட்ட தோண்டிய பள்ளம் 70 நாட்கள் ஆகியும் அடுத்த கட்ட வேலை ஆரம்பிக்கவில்லை. இதனால் தெருவில் பகலில் கூட நடந்து செல்லவும் டூவீலர் செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றோம். விரைந்து பணியை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகளை வீட்டில் பூட்டி வைப்பதா

கலா, ஜெயமங்கலம்: வீட்டில் சிறுவர்கள் உள்ளனர். எத்தனை நாள் அவர்களை வெளியே விடாமல் பாதுகாக்க முடியும். விளையாட்டு பிள்ளைகள் அழுகின்றனர். சாக்கடை பள்ளத்தால் பயந்து பள்ளி விடுமுறைக்கு உறவினர்கள் பிள்ளைகளை அனுப்பவில்லை. பணி முடியாததால் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி நிர்வாகம் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அக்ரஹாரம் தெருக்களில் சாக்கடை கட்டுமானப் பணி நடக்காததால், அருகேயுள்ள பெருமாள் கோயில் தெருவில் சாக்கடை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. வெயிலில் கூலி வேலை செய்து விட்டு சாப்பாடு நிம்மதியாக சாப்பிடமுடியவில்லை. தூய்மைப் பணியாளர்கள் சாக்கடை கழிவுகளை அகற்றி, கொசு மருந்து தெளித்து , பிளிச்சிங் பவுடர் அடித்து தூய்மை செய்ய வேண்டும்.

நடவடிக்கை

ஊராட்சி தலைவர் அங்கம்மாள் கூறுகையில்: பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெருமாள் கோயில் பகுதியில் தூய்மை செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை