உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒலிபெருக்கி இசைப் போட்டி

ஒலிபெருக்கி இசைப் போட்டி

கம்பம்: கம்பம் வட்டார ஒலி பெருக்கி உரிமையாளர்கள், தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒலிபெருக்கி இசைப் போட்டி நடைபெற்றது.கம்பம் புதுக்குளம் அருகில் மலையடிவாரத்தில் ஒலிபெருக்கி இசைப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தேனி, மதுரை மாவட்டங்களை சேர்ந்த ஒலிபெருக்கி உரிமையாளர்கள், திறந்த வெளியில் தங்களின் ஒலிபெருக்கிகளை கட்டி பாடல்களை ஒலி பரப்பினர். எந்த ஒலி பெருக்கியில் இருந்து அதிக ஒலி மற்றும் இசை தெளிவாக ஒலித்ததோ அந்த ஒலி பெருக்கி ரிமையாளர்கள் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசு ரூ.21 ஆயிரத்து 111 ம், இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரத்து 503, மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரத்து 501, நான்காம் பரிசு ரூ.5 ஆயிரத்து 500 ரொக்கமாக வழங்கப்பட்டது.ஒலிபெருக்கிகளை திறந்த வெளியில் அமைத்து, ஒலி பரப்ப வேண்டும். அதிக தூரத்தில் எந்த ஒலிபெருக்கியின் பாடல் தெளிவாக கேட்கிறது என்பதை வைத்து வெற்றி நிர்ணயம் செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரி வித்தனர். இந்த போட்டியை காண அதிக அளவில் இளைஞர்கள் குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை