உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திறமைகளை வளர்ப்பதன் மூலம் மாணவர்கள் வெற்றி பெறலாம் மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பேச்சு

திறமைகளை வளர்ப்பதன் மூலம் மாணவர்கள் வெற்றி பெறலாம் மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பேச்சு

போடி: 'கடின உழைப்பு, விடாமுயற்சியுடன் திறமைகளை வளர்ப்பதன் மூலம் மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெறலாம்' என மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் போடி சி.பி.ஏ., கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசினார்.போடி சி.பி ஏ., கல்லூரியில் மாணவர்களுக்கான 40 வது பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. செயலாளர் புருஷோத்தமன், முதல்வர் சிவகுமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் கமலநாதன், சிவப்பிரகாசம். சொரூபன், துணை முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் முருகேசன் வரவேற்றார்.இக்கல்லூரியில் படித்த பல்வேறு துறைகளைச் சார்ந்த 592 மாணவ, மாணவிகளுக்கு மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் பட்டம் வழங்கி பேசுகையில் :இன்றைய தொழில்நுட்பம் நம்மை ஆளுமை செய்து வருகிறது. மாணவர்கள் கல்வி கற்று திறமைகளை வளர்ப்பதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாம். போட்டி நிறைந்த உலகில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய இந்தியா தொழில்நுட்பம், பொருளாதாரம், விவசாயம், மருத்துவம், எரிசக்தியில் முன்னேற்றம் கண்டு உள்ளது. பெண் சமுதாயம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. மாணவர்கள் சமுதாய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றி முன்னேற வேண்டும். கல்வி கற்க உறுதுணையாக இருந்து பாடுபட்ட பெற்றோர்களுக்கு மாணவர்கள் என்றும் நன்றியுடன் இருக்க வேண்டும். இன்றைய வாழ்க்கையில் கடின உழைப்பு, விடாமுயற்சியுடன் திறமைகளை வளர்த்து கொள்வதன் மூலம் மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெறலாம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்