உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சோளம் விளைச்சல், விலையும் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

சோளம் விளைச்சல், விலையும் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

போடி: போடி பகுதியில் சோளம் விளைச்சலும் விலையும் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.போடி பகுதியில் மீனாட்சிபுரம், அம்மாபட்டி, பத்திரகாளிபுரம், விசுவாசபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி, டொம்புச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சோளம் பயிரிட்டுள்ளனர். சோள பயிருக்கு ஜூன், ஜூலை. ஆகஸ்ட் சீசனாகும். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விளைச்சல் மட்டுமின்றி விலையும் அதிகரித்து உள்ளது.விவசாயிகள் கூறுகையில் : உரம் விலை, தொழிலாளர்களின் சம்பளம் உயர்ந்த நிலையில் சோளத்திற்கு போதிய விலை இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுபடியாகும். கடந்த ஆண்டு குவிண்டால் ரூ.1700 முதல் ரூ.1800 வரை விலை போனது. இந்த விலை கட்டுபடியாகாத நிலை இருந்தது. தற்போது குவிண்டால் ரூ 2300 முதல்ரூ.2400 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இந்த ஆண்டு விளைச்சல், விலையும் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்