உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணிக்கவாசகர் கோயில் இன்று ஆனி திருமஞ்சனம்

மாணிக்கவாசகர் கோயில் இன்று ஆனி திருமஞ்சனம்

சின்னமனூர்: சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு இன்று ( ஜூலை 12 ) திருமஞ்சனம் மற்றும் சுவாமி வீதி உலா நடக்கிறது.தமிழகத்தில் மாணிக்கவாசகருக்கென தனி கோயில் சின்னமனூரில் மட்டுமே உள்ளது. பிரசித்தி பெற்ற இக் கோயிலில் 12 நாட்களுக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன விழா ஜூலை முதல் தேதி முகூர்த்த கால் ஊன்றி, சுவாமிகளுக்கு காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. திரளான சிவனடியார்கள் பங்கேற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா நடைபெறும் 12 நாட்களும் மாலை மூலவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாணிக்கவாசகர் இத்திருத்தலத்தில் மூன்று மூலவர்களாக இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் தெற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கும் ஒற்றை சனீஸ்வரபகவான் பக்தர்களின் வேண்டுதலை உடனே நிறைவேற்றுவார் என்கின்றனர்.ஆனி திருமஞ்சன விழாவின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மாணிக்கவாசகர் குரு பூஜை மற்றும், அன்று மாணிக்கவாசகர் சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற அன்ன தானத்தில் பக்தர்கள் பங்கேற்றனர். இன்று ஆனி உத்திரத்தை முன்னிட்டு , நடராசர் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகளும், சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி