உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பண மோசடி: நீதிமன்ற பெண் எழுத்தர் மீது வழக்கு

பண மோசடி: நீதிமன்ற பெண் எழுத்தர் மீது வழக்கு

பெரியகுளம் : நீதிமன்றம் பணத்தை மோசடி செய்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமை எழுத்தர் ஹேமலதா மீது, தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பெரியகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தர் ஹேமலதா 2023 ஆக. 24 ல் பணியில் சேர்ந்தார். அன்றைய தினமே பல்வேறு வழக்குகளில் வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ.9000, அரசுக்கு செலுத்த வேண்டியதை ஹேமலதா செலுத்தவில்லை.இந்த நீதிமன்றத்தில் குற்றப்பதிவேட்டில் பதிவு செய்யாமல் நீதிபதியிடம் கையெழுத்து வாங்கவில்லை. 2023 அக் 3ல், பல்வேறு வழக்குகளில் வசூல் செய்யப்பட்ட அபராதம் தொகை ரூ.64,000, அரசுக்கு முழுமையாக செலுத்தாமல் மறுநாள் 2023 அக் 4 ல், ரூ. 48,000 மட்டும் செலுத்தி ரூ.16,000 யை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நீதிபதியிடம் கையெழுத்து வாங்கவில்லை.மொத்த நிலுவை ரூ. 25,000, பணத்தை இது நாள் வரை அரசு கணக்கில் செலுத்தப்படாமல் இருந்தார். இதன் காரணமாக 2024 பிப்.2ல் ஹேமலதா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து தற்போது வரை பணம் செலுத்தவில்லை. தலைமை எழுத்தர் ஸ்ரீராம் பிரகாஷ் புகாரில், தென்கரை எஸ்.ஐ., அனுசுயா, ஹேமலதா மீது மோசடி வழக்கு பதிவு செய்தார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ