உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளாவில் பருவ மழை 16 சதவீதம் குறைவு வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளாவில் பருவ மழை 16 சதவீதம் குறைவு வானிலை ஆய்வு மையம் தகவல்

மூணாறு : கேரளாவில் பருவ மழை ஜூன் ஒன்று முதல் ஜூலை 16 வரையில் இயல்பை விட 16 சதவீதம் குறைவு என வானிலை ஆய்வு மையம் கணக்குபடி தெரியவந்துள்ளது.கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து ஐந்து நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பருவ மழை ஜூன் ஒன்று முதல் ஜூலை 16 வரை மாநில வானிலை ஆய்வு மையம் கணக்குபடி இயல்பைவிட 16 சதவீதம் குறைவு என தெரியவந்தது. கண்ணுார் மாவட்டத்தில் இயல்பை விட 3 சதவீதம் அதிகம் மழை பெய்த நிலையில் மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் பருவ மழை மிகவும் குறைவாக பதிவானது. இம்மாவட்டத்தில் 34 சதவீதம் குறைவு.கண்ணூர் மாவட்டத்தில் இயல்பாக 1352 மி.மீ., மழை பெய்ய வேண்டும் என்றபோதும் மூன்று சதவீதம் அதிகமாக 1391.6 மி.மீ., மழை பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை