உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் ஆக்கிரமிப்புகளால் அலறும் வாகன ஓட்டிகள்; அரசியல் தலையீடு இன்றி நடவடிக்கை தேவை

தேனியில் ஆக்கிரமிப்புகளால் அலறும் வாகன ஓட்டிகள்; அரசியல் தலையீடு இன்றி நடவடிக்கை தேவை

தேனி: தேனி நகரின் மையப் பகுதியான நேரு சிலை அருகே மதுரை, பெரியகுளம், கம்பம் ரோடுகளில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. அதனை அரசியல் தலையீடுகளை கண்டு கொள்ளாமல் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேனி நகராட்சி மாவட்ட தலை நகராக உள்ளது. தேனி வழியாக கேரளாவிற்கு செல்வோர், சுற்றுலா, வழிபாட்டு தலங்களுக்கு வருவோர் தேனி நகர்பகுதி வழியாக பயணிக்கின்றனர். ஆனால் நகரின் முக்கிய பகுதியான பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் அரண்மனைப்புதுார் விலக்கு, பெரியகுளம் ரோட்டில் அல்லிநகரம், கம்பம் ரோட்டில் கொட்டக்குடி ஆற்றுபாலம் வரை ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இதனை ஒரு போதும் கண்டு கொள்வது இல்லை. இதனால் பல நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் மற்ற வாகனங்களுடன் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கி தவிப்பது தொடர்கிறது.இதற்கு தீர்வு காண அதிகாரிகள் அரசியல் அழுத்தங்களை புறந்தள்ளி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ரோட்டோர வியாபாரிகளுக்கு வேறு பகுதியில் தினசரி சந்தை போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும். மேலும் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பெரியகுளம், கம்பம், மதுரை ரோடுகளில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரு சிலை அருகே பெரியகுளம் ரோட்டில் மினி பஸ் பஸ்களுக்கு என தனியாக அமைக்கப்பட்ட மினிபஸ் நிறுத்தங்களை அந்த பகுதியில் பெரும் நெரிசல் தவிர்க்கப்படும். போக்குவரத்தை மாற்றம் செய்யாமல் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போக்குவரத்து நெரிசல் இருக்காது.ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை