| ADDED : ஜூலை 31, 2024 06:06 AM
தேனி : மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் தேனி கிளையின் சார்பில், பணிமூப்பு அடிப்படையில் இன சுழற்சி முறை பின்பற்றப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பணி அமர்த்தப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் குருமூர்த்தி, பொருளாளர் மீனாதேவி, துணைச் செயலாளர் வேல்மணி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவ்ட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ், மாவட்டத் துணைத் தலைவர் முரளிதரன், மாவட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் முத்துக்குமார், மணிகண்டன் , வி.சி.க., தேனி, திண்டுக்கல் மண்டலச் செயலாளர் தமிழ்வாணன் வாழ்த்திப் பேசினர். உடல் ஊனமுற்றோர் சங்க மாவட்டப் பொறுப்பாளர் முத்துதர்மராஜா நன்றி தெரிவித்தார்.