| ADDED : மே 05, 2024 03:43 AM
போடி : கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, அக்னி நட்சத்திரமும் சேர்ந்து மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் கூலித் தொழிலாளர்கள், மக்கள், டூவீலரில் செல்வோர் மிகவும் பாதிப்பு அடைகின்றனர். வெயிலின் பாதிப்பை சமாளிக்கும் வகையில் போடி அருகே சிலமலையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் லட்சுமணன் தலைமையில் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆசிப்கான், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் கண்ணன் காளிகா ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.பெரியகுளம்:- பஜார் வீதியில் நகர தி.மு.க., சார்பில் நீர்மோர் வழங்கும் விழா, நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் நடந்தது. சரவணக்குமார் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் சுமிதா முன்னிலை வகித்தனர். தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நீர் மோர் வழங்கி துவக்கி வைத்தார். நகராட்சி கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.