| ADDED : மார் 25, 2024 05:43 AM
கூடலுார் : இடுக்கி லோக்சபாவில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களே மீண்டும் போட்டியிடுவதால் தமிழக கேரள எல்லை தேக்கடி, குமுளியில் இதுவரை பிரசாரம் களை கட்டவில்லை.கேரளாவில் தமிழக எல்லையோரத்தில் அமைந்துள்ளது இடுக்கி லோக்சபா தொகுதி. பீர்மேடு, தேவிகுளம், உடுப்பஞ்சோலை சட்டசபை தொகுதிகளில் தமிழக வாக்காளர்கள் அதிகம்.இத் தொகுதியில் முக்கியமானதாக தேக்கடி, குமுளி சுற்றுலாத்தலம் உள்ளது.காங்., கூட்டணி சார்பில் டீன் குரியா கோஸ், கம்யூ., கூட்டணி சார்பில் ஜோய்ஸ் சார்ஜ் வேட்பாளராக களத்தில் உள்ளனர். சிட்டிங் எம்.பி.யும், முன்னாள் எம்.பி., யும் மூன்றாவது முறையாக நேரடியாக மோதுகின்றனர்.இதனால் வேட்பாளர்கள் அறிமுகம் தேவையில்லாததால் தேர்தல் பிரசாரம் பரபரப்பின்றி உள்ளது.பா.ஜ., சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட சங்கீதா இதுவரை பிரசாரத்தை துவக்காமல் உள்ளார். இதனால் தேக்கடி, குமுளியில் இதுவரை பிரசாரம் களை கட்டவில்லை.