உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மரக்கன்றுகள் வளர்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் என்.எஸ்.எஸ்., 50 ஆயிரம் பனை நாற்றுகள் உருவாக்க திட்டம்

மரக்கன்றுகள் வளர்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் என்.எஸ்.எஸ்., 50 ஆயிரம் பனை நாற்றுகள் உருவாக்க திட்டம்

மரக்கன்றுகள் வளரப்பதின் அவசியத்தையும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்த்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும் மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் என்.எஸ்.எஸ்., அமைப்பு மாணவர்கள் மூலம் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.மரங்கள் அதிகம் இருந்தால் இந்த அளவிற்கு வெயில் வாட்டி வதைக்காது என்பதே இன்று பலரும் கூறும் வார்த்தையாகும். ரோட்டில் டூவீலர், கார் என பல வகையான வாகனங்களில் பயணித்தாலும் ரோட்டோர மர நிழலில் நின்று இளைப்பாற விரும்பாதவர்கள் இல்லை. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. அதனால் தற்போது பலரும் கோடை கால பருவம் முடிந்ததும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என உறுதி ஏற்று வருகின்றனர். இதனை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளில் செயல்படும் பசுமைப்படை, என்.எஸ்.எஸ்., என்.சி.சி., அமைப்புகள் மூலம் சில ஆண்டுகளாகவே மரக்கன்றுகள் நடுவதற்காக பொது மக்களுக்கு இலவச மரக்கன்றுகள், வனப்பகுதியில் விதைப் பந்துகள், குளம், ஏரி, ஆற்றங்கரைகளில் மரக்கன்றுகள் நடவு செய்தல் பணி, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இச்செயல்களில் பள்ளி மாணவர்கள் தங்கள் முழு பங்களிப்பை வழங்கி வருவதால் பல இடங்களில் மரங்கள் தழைத்து வளர துவங்கி உள்ளன.

வெளி மாவட்டங்களுக்கு இலவச பனை நாற்றுகள் நேருராஜன்,என்.எஸ்.எஸ்., மாவட்ட ஒருங்கிணைப் பாளர், தேனி: மாவட்டத்தில் கடந்தாண்டு வரை 52 பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., அமைப்புகள் இருந்தன. இக்கல்வி ஆண்டு முதல் 3 பள்ளிகளில் கூடுதலாக அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 60 பேர் வரை என்.எஸ்.எஸ்., அமைப்பில் உள்ளனர். ஒவ்வொரு பள்ளி சார்பிலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து உள்ளோம். அங்கு பள்ளி சார்பில் பயிற்சி முகாம் நடக்கிறது. பயிற்சி முகாமில் மாணவர்கள் மரக்கன்றுகளை அப்பகுதிகளில் நடவு செய்கின்றனர். ஓராண்டில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர கடமலைக்குண்டு, லோயர்கேம்ப், குரங்கனி, சுருளி அருவி செல்லும் பகுதிகளில் மாணவர்கள் தயாரித்த 20 ஆயிரம் விதைப்பந்துகள் துாவப்பட்டுள்ளன.

தேவாரம் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை 3 பள்ளி நிர்வாகங்கள் இணைந்து டிராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். இதுதவிர மாதந்தோறும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சுருளி அருவி, சோத்துப்பாறை அணைப் பகுதிகளில் வனத்துறையுடன் இணைந்து பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை