உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளம் தாலுகாவில் ஜூன் 19ல் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்

பெரியகுளம் தாலுகாவில் ஜூன் 19ல் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்

தேனி: மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் பெரியகுளம் தாலுகாவில் ஜூன் 19ல் நடத்தப்பட உள்ளது.தமிழகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் கலெக்டர், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., துறை வாரியான மாவட்ட அலுவலர்கள் குறிப்பிட்ட தாலுகாக்களை தேர்வு செய்து ஒரு நாள் முழுவதும் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்வர். இம்முகாம் ஜன.,ல் ஆண்டிப்பட்டி தாலுகா, பிப்.,ல் உத்தமபாளையம் தாலுகாவில் நடந்தது. லோக்சபா தேர்தல் விதி அமலில் இருந்ததால் மூன்று மாதங்கள் நடைபெறவில்லை. இம்முகாம் பெரியகுளம் தாலுகாவில் ஜூன் 19ல் நடக்க உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறை, பிறதுறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.ஆய்வில் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்ய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை