உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முன்னாள் முதல்வர் நினைவு நாளில் காங்., உதவி

முன்னாள் முதல்வர் நினைவு நாளில் காங்., உதவி

மூணாறு : மூணாறில் மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியின் நினைவு நாளான நேற்று காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு உதவிகளை செய்தனர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி கடந்தாண்டு ஜூலை 18ல் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்று காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு உதவிகளை செய்தனர்.அதன்படி ஐ.என்.டி.யு.சி. சார்பிலான தென்னிந்திய தோட்ட தொழிலாளர் சங்கம், அச்சங்கத்தைச் சேர்ந்த கூட்டுறவு வங்கி ஆகியோர் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. அதில் 300 க்கும் மேற்பட்டோர் பயன் அடைந்தனர்.காங்கிரஸ் மூணாறு மண்டல குழு சார்பில் ஊராட்சியைச் சேர்ந்த தூய்மை பணியாளர் 80 பேருக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்கினர். மண்டல தலைவர் நெல்சன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.மணி வேட்டி, சேலை வழங்கி துவக்கி வைத்தார். காங்., மாவட்ட பொது செயலாளர் முனியாண்டி, ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஐ.என்.டி.யு.சி. வட்டார தலைவர் குமார், காங்., தலித் பிரிவு தலைவர் சுரேஷ், மூணாறு ஊராட்சி தலைவர் தீபா, துணை தலைவர் பாலசந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை