உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொகுதி பிரச்னைகளை பேசாத கட்சி வேட்பாளர்கள் ; நடுநிலை வாக்காளர்கள் அதிருப்தி

தொகுதி பிரச்னைகளை பேசாத கட்சி வேட்பாளர்கள் ; நடுநிலை வாக்காளர்கள் அதிருப்தி

கம்பம்: லோக்சபா தேர்தலில் தொகுதியின் முக்கிய பிரச்னைகள் பிரசாரத்தில் இடம் பெறாதததால் நடுநிலை வாக்காளர்களிடம் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.தேனி லோக்சபா தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ் செல்வன் அ.தி.மு.க. சார்பில் நாராயணசாமி, அ.ம.மு.க. சார்பில் தினகரன் களத்தில் உள்ளனர். முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு, கட்சி நிர்வாகிகளை களத்தில் இறக்கி விடுவது போன்ற பணிகள் நடந்து வருகிறது. அ. ம.மு.க. தினகரன் நேரடியாக பிரசாரத்தை துவக்கி விட்டார். வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில பெரியகுளம், போடி, கம்பம் தொகுதிகளில் ஒரு ரவுண்ட் வந்து விட்டார்.ஆனால் தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் சோழவந்தான், உசிலம்பட்டி பகுதியில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி விட்டு, நேற்று கம்பம், போடி, ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி அளவிலான செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்தி உள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்து பிரசாரத்தை துவங்குகிறார். தி.மு.க. அ.ம.மு.க. வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரத்தில் இறங்கி விட்டனர்.அவர்கள் இருவரது பிரசாரத்திலும் தொகுதியின் பிரதான பிரச்னைகளாகன முல்லைப் பெரியாறு அணை, சாக்குலுத்து மெட்டு ரோடு பிரச்னை எதுவும் இடம் பெறவில்லை. அ.ம.மு.க. பிரதமரை பிரதானமாகவும், தி.மு.க. வேட்பாளர் மகளிர் உரிமை தொகையை பிரதானமாகவும் பேசி வருகின்றனர். தொகுதியின் பிரதான பிரச்னைகள் என்ன, வெற்றி பெற்றால் அதை நிறைவேற்றுவேன் என்பது மாதிரியான வாக்குறுதி எதுவும் தராமல் பேசி வருகின்றனர். இவர்களின் இந்த பேச்சு நடுதிலை வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளரை பொறுத்தவரை 'ஸ்லோ அண்ட் ஸ்டெடி' நிலையில் களத்தில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை