உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறில் தமிழக அரசு பஸ்கள் இன்றி மக்கள், தொழிலாளர்கள் அவதி

மூணாறில் தமிழக அரசு பஸ்கள் இன்றி மக்கள், தொழிலாளர்கள் அவதி

மூணாறு, : மூணாறுக்கு நேற்று தமிழக அரசு பஸ்கள் வராததால் மக்கள் அவதியுற்றனர்.சுற்றுலா நகரான மூணாறுக்கு, தமிழகத்தில் போடி, தேனி, மதுரை, ராஜபாளையம், சங்கரன்கோவில், திருநெல்வேலி, உடுமலைபேட்டை, கோயம்புத்துார், பழநி ஆகிய பகுதிகளில் இருந்து தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.இடுக்கி மாவட்டத்தில் மழை தொடர்வதால் இரவு நேர பயணத்திற்கு (இரவு 7:00 முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை) மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.இந்நிலையில் கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கேப் ரோட்டில் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதால், அந்த வழியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது.

மாற்று வழி

அதனால் மூணாறில் இருந்து பள்ளிவாசல், குஞ்சுதண்ணி, ராஜகுமாரி, ராஜாக்காடு வழியாக மாற்று வழியில் பூப்பாறை சென்று தேனி உள்பட பிற பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில் கேப் ரோடு வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் நேற்று தேனியில் இருந்து மூணாறுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் வரவில்லை.

அவதி

மூணாறைச் சுற்றியுள்ள தேயிலை தோட்டங்களில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் பல தலைமுறைகளாக தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். தொழிலாளர்களுக்கு ஆடிக்கு நிர்வாகம் 2 நாட்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த விடுமுறையில் தொழிலாளர்கள் தமிழகம் சென்று வருவார்கள். நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் நேற்று ஏராளமானோர் தமிழகம் சென்றனர். ஆனால் வழக்கம்போல் இயக்கப்படும் தமிழக அரசு பஸ்கள் வராததால் தொழிலாளர்கள் உள்பட பயணிகள் அவதியுற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி