உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புலிக்குட்டி என காட்டு பூனைக்கு அஞ்சிய மக்கள்

புலிக்குட்டி என காட்டு பூனைக்கு அஞ்சிய மக்கள்

மூணாறு: மூணாறு அருகே வட்டவடையில் வீட்டினுள் பதுங்கிய காட்டு பூனையை புலி குட்டி என எண்ணி மக்கள் வெகு நேரம் அச்சத்தில் உறைந்தனர்.வட்டவடையைச் சேர்ந்த சண்முகத்தின் பூட்டி கிடந்த வீட்டினுள் புலி குட்டி புகுந்து விட்டதாக தகவல் பரவியது. வீட்டைச் சுற்றி ஏராளமானோர் திரண்ட போதும் வீட்டினுள் செல்ல அஞ்சினர். கதவின் இடைவெளி வழியாக சிலர் அலைபேசியின் வெளிச்சத்தை பயன்படுத்தி பார்த்தபோது அறையின் மூலையில் பதுங்கி இருந்தது புலி குட்டியாக தோன்றியது. வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.அவர்கள் வீட்டை சோதனையிட்டபோது பதுங்கி இருந்தது காட்டு பூனை என தெரியவந்தது. வனத்துறையினர் காட்டு பூனையை பிடித்து வனத்தில் விட்டனர்.புலி குட்டி என எண்ணி வெகு நேரமாக அச்சத்தில் உறைந்த மக்கள் காட்டு பூனை என தெரிந்ததும் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ