உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அத்தியூத்து இலங்காவரிசை ரோடு வசதி கோரி கலெக்டரிடம மனு

அத்தியூத்து இலங்காவரிசை ரோடு வசதி கோரி கலெக்டரிடம மனு

போடி: அத்தியூத்து - இலங்காவரிசை கிராமத்திற்கு ரோடு வசதி கோரி போடி,சோலையூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் விவசாயிகள் கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.போடி அருகே சோலையூரில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஆர்.டி.ஓ., தாட்சாயிணி, அணைக்கரைப்பட்டி ஊராட்சி தலைவர் லோகநாதன் முன்னிலை வகித்தனர். விழாவில் பட்டா மாறுதல், பட்டா பெறுதல், முதியோர் உதவித் தொகை, வீட்டுமனை வழங்கள், மகப்பேறு பெட்டகம், வேளாண் பண்ணைக் கருவிகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை உட்பட 56 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.மலைக் கிராமமான அத்தியூத்து - இலங்காவரிசை ரோடு வசதி, ரேஷன் கார்டு, கல்வி, முதியோர் உதவித் தொகை, பட்டா கேட்டு விவசாயிகள் உட்பட 76 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டன. வேளாண், போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலத்துறையை சேர்ந்த அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை