உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணியிடங்கள் காலி

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணியிடங்கள் காலி

கம்பம் : அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மருந்து மாத்திரைகள் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 41 உள்ளன. அதில் 6 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 27 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களாகும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருந்தாளுனர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் நோயாளிகள் மருந்து மாத்திரை பெற சிரமம் ஏற்படுகிறது. இது தொடர்பாக சுகாதாரத் துறை பணியாளர்கள் கூறுகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணியிடங்கள் 90 சதவீதம் காலியாக உள்ளது. ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து மாத்திரைகள் கொடுக்கும் பணியை நர்சுகள் மூலம் பார்த்து வருகிறோம். உடனே மருந்தாளுனர்களை நியமிக்க சுகாதாரத்துறை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை