உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடி அருகே போலீசார் கொடி அணி வகுப்பு ஊர்வலம்

போடி அருகே போலீசார் கொடி அணி வகுப்பு ஊர்வலம்

போடி : லோக்சபா தேர்தலை முன்னிட்டு நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு செய்யவும், வாக்காளர்கள் அச்சம் இன்றி ஓட்டளிப்பதை உறுதி செய்யும் வகையில் போடி அருகே போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. டி.எஸ்.பி., பெரியசாமி தலைமை வகித்தார். மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டிங் ஆபிசர் நிர்மல் குமார் முன்னிலை வகித்தார். ஊர்வலம் போடி மீனாவிலக்கில் துவங்கி மீனாட்சிபுரம் வழியாக கீழச் சொக்கநாதபுரம், ரங்கநாதபுரம் வரை சென்று முடித்தனர். போடி தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பஞ்சவர்ணம், எஸ்.ஐ.,க்கள் இதிரிஸ்கான், மணிகண்டன், மத்திய தொழிலில் பாதுகாப்பு படை வீரர்கள், ஆயுதப்படை போலீசார் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ