உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

பஸ் மோதி ஒருவர் பலிதேனி: கேரளா, இடுக்கி கஜனாபாறை பாபுஜி 52, இவர் தர்மாபுரியில் குடும்பத்துடன் தங்கி கிளினிக் நடத்தி வந்தார். இவரது மனைவி ஷீஷா 49, இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நேற்று காலை பாபுஜி மாத்திரைகள் வாங்குவதற்காக டூவீலரில் சென்றார். உப்பார்பட்டி பிரிவில் இவருக்கு பின்னால் கம்பத்தில் இருந்து தேனிக்கு மேலக்கூடலுார் பாஸ்கரன் ஓட்டி வந்த அரசு பஸ் மோதியது. இதில் பாபுஜி சம்ப இடத்திலேயே பலியானார். ஷீஷா புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.ஊராட்சி ஒன்றிய உதவியாளர்மயங்கி விழுந்து மரணம்தேனி: தம்மிநாயக்கன்பட்டி தெற்குதெரு ஜோதிபாசு 41, கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி பிரியா. இருவருக்கும்க இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். ஜோதிபாசு 5 ஆண்டுகளாக மன அழுத்தம், ரத்த அழுத்த நோய்களுக்கு சிகிச்சை பெற்ற வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தேனி புது பஸ் ஸ்டாண்டில் மயங்கி விழுந்தார். அவரை 108 ஆம்புலன்சில் மீட்டு தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது தாய் ராஜேஸ்வரி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் மாயம்தேனி: பாலன்நகர் 4வது தெரு சோனைராஜா26, இவரது டூவீலரரை வீட்டு முன் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில்வீட்டு முன் நிறுத்தி இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள டூவீலர் திருடு போனது. இவரது புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் மோதி ஒருவர் காயம்தேனி: ராமநாதபுரம் கமுதி கருப்பசாமி 50, வீரபாண்டி திருவிழாவிற்கு மேளதாளம் இசைக்க வந்தார். வீரபாண்டி வயல்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். வீரபாண்டி கணேசன் 45, ஓட்டிச்சென்ற டூவீலர் கருப்பசாமி மீது மோதியது. காயமடைந்த கருப்பசாமி சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி