உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

மெக்கானிக் மீது வழக்குதேனி: பத்திரகாளிபுரம் மெக்கானிக் வீரமணி. இவர் டொம்புச்சேரி ரோட்டில் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இவரிடம் ரூ.30 ஆயிரம் கொடுத்து பத்திரகாளிபுரம் பஜனை கோயில் தெரு கனகமணி தனது மகன் நவீன்குமாருக்கு டூவீலர் வாங்கினார். டூவீலருக்கான ஆவணங்கள் தராமல் வீரமணி இழுத்தடித்தார். மேலும் டூவீலரில் தொடர் பழுது ஏற்பட்டு வந்தது. இதனால் டூவீலரை வீரமணியிடம் ஒப்படைத்து விட்டு பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு நவீன்குமார் கேட்டார். கோபமடைந்த வீரமணி, அவரது மனைவி பிரியதர்ஷினி, தாய் விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து நவீன்குமாரை அசிங்கமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த நவீன்குமார் தேனி மருததுவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கபட்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் மெக்கானிக் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.கொலை மிரட்டல்தேனி: கோடங்கிபட்டி இந்திராகாலனி முருகராஜ் 34, கூலி தொழிலாளி. இவர் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு டீ வாங்க சென்றார். டொம்புச்சேரி அருகே பேக்கரி கடை முன் அதே பகுதியை சேர்ந்த சிங்கம் மகன் கருப்பையா, லட்சுமணன் மகன் கருப்பையா ஆகியோர் இணைந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். முருகராஜ் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது வழக்கப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி